ETV Bharat / state

விளையாட்டு மைதானமான பேருந்து நிலையம்!

திண்டுக்கல்: நத்தம் அருகே செந்துறையில் புதிதாகக் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராத புதிய பேருந்து நிலையம் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது.

youngsters-playing-cricket-in-natham-new-bus-stand
youngsters-playing-cricket-in-natham-new-bus-stand
author img

By

Published : Dec 1, 2019, 1:32 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையில் இருந்து மாமரத்துப்பட்டி செல்லும் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையம் செயல்படாததால் செந்துறை வரும் பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல் சந்தைப் பேட்டை அருகில் நின்று செல்கின்றன. இதனால் காலியாக உள்ள பேருந்து நிலையத்தில் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறிவருகிறது.

விளையாட்டு மைதானமான பேருந்து நிலையம்

பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் மக்களுக்கு பயனின்றி உள்ளது. மேலும் இங்கு மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் போன்ற செயல்கள் நடைபெறுவதால் பகல் நேரங்களில் அப்பகுதி வழியாகச் செல்வதற்கே மக்கள் தயங்குகின்றனர். எனவே மக்கள் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மின்சார ரயிலில் கஞ்சா விற்பனை செய்தவரை பிடித்த பயணிகள்

Intro:திண்டுக்கல் 30.11.19

நத்தம் அருகே செந்துறையில் பயன்பாட்டிற்கு வராத புதிய பேருந்து நிலையம் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது.

Body:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ள செந்துறையில் புதிதாக கட்டப்பட்ட பஸ்ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வராததால் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது .

செந்துறையில் இருந்து மாமரத்துப்பட்டி செல்லும் ரோட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கப்பட்டது.
ஆனால் பஸ் ஸ்டாண்ட் செயல்படாததால் செந்துறை வரும் பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் சந்தைப் பேட்டை அருகில் நின்று செல்கின்றன. இதனால் காலியாக உள்ள பஸ் ஸ்டாண்டில் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக பயன்பட்டு வருகிறது.

பல லட்சம் மதிப்பிலான பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு பயனின்றி உள்ளது. மேலும் இங்கு மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் போன்ற செயல்கள் நடைபெறுவதால் பகல் நேரங்களில் அப்பகுதி வழியாக செல்வதற்கே மக்கள் தயங்குகின்றனர். எனவே மக்கள் பயன்படுத்தும் வகையில் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்மக்கள் வலியுறுத்துகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.