திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் ராஜா. இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருச்சியில் குடியேறி கட்டட வேலை செய்துவருகிறார். இஸ்ரவேல் ராஜா தனது சொந்த ஊரான திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்காக குடும்பத்தினருடன் சென்றார்.
இந்நிலையில், இஸ்ரவேல் ராஜாவுக்கும் அவரது தம்பி விஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜி தனது அண்ணனைக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இஸ்ரவேல் ராஜாவின் குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இஸ்ரவேல் ராஜாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொலை செய்த விஜியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சொத்துக்காக சொந்த அண்ணனையே தம்பி குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.