திண்டுக்கல் மாவட்டம் புளிய ராஜக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனம். இவர் மூன்று பிள்ளைகளுடன் அதேப் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இலவச கழிப்பறை கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவரது கணவரின் அண்ணன் மாமுண்டி வீட்டின் அருகே கழிப்பறை கட்ட விடாமல் எதிர்ப்பு தெரிவித்தும், தகாத வார்த்தைகளால் பேசியும் அவரை தாக்க முயறன்றுள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த தனம் தனது மூன்று பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குடும்பத்தோடு மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மண்ணை உண்டு வாழும் அதிசயப் பாட்டி!