திண்டுக்கல் மாவட்டம், சிலப்பாடி லட்சுமி நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரது, கணவர் முத்துவேல் திண்டுக்கல் ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 12ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு பயிலும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், பரமேஸ்வரிக்குக் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுமுறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பரமேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : லேசான கரோனா அறிகுறியா? - வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசு உத்தரவு!