ETV Bharat / state

இலக்கிய துறையில் சாதிக்க பெண்கள் முன்வர வேண்டும் - எழுத்தாளர் சோ.தர்மன் - nilakottai

இலக்கிய படைப்பாற்றல் துறையில் சாதிக்க பெண்கள் முன்வர வேண்டும் என எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.

இலக்கிய துறையில் சாதிக்க பெண்கள் முன்வர வேண்டும்

author img

By

Published : May 26, 2022, 12:58 PM IST

திண்டுக்கல்: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் இயல்,இசை,நாடக முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் லதாபூரணம் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரான சோ.தர்மன் பேசுகையில், இயந்திர மயமான இன்றைய நவீன காலத்தில் இயல் இசை நாடகம் என்ற முப்பெரும் அரிச்சுவடிகளை கற்றால் மட்டுமே மாணவிகள் ஒழுக்கம், தனித்திறமை உட்பட அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்.

உலகில் மூத்த மொழியான தமிழில் ஆயிரக்கணக்கான படைப்புகள் புதைந்து கிடக்கின்றது. ஒளவையார் காலம் தொட்டு பெண்கள் இத்துறையில் சாதித்து வருகின்றனர். ஆனால் 1955 முதல் 67 ஆண்டுகளாக படைப்பாற்றல் துறையில் வெறும் நான்கு பெண்கள் மட்டுமே சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளனர். படைப்பாற்றல் துறையிலும் பணம்,பேர்,புகழ், மகிழ்ச்சி என கொட்டி கிடக்கின்றது.

இலக்கிய துறையில் சாதிக்க பெண்கள் முன்வர வேண்டும்

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் அடுத்த தலைமுறையை உருவாக்கும் நீங்கள் படைப்பாற்றல் துறையில் அதிக ஆர்வம் காட்டி பல்வேறு வெற்றிகளை பெற வேண்டும் என பேசினார். தொடர்ந்து விழாவில் கோலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட இயல் இசை நாடகம் சார்ந்த போட்டிகள் நடந்தது.

இதையும் படிங்க: திண்டுக்கல் ஐ.லியோனி மீது புகார் மனு அளித்த புரட்சி பாரதம் கட்சியினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.