திண்டுக்கல்: நடப்பு ஆண்டில் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம் இயற்கைச்சூழல், மாணவியர் தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றால், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க, பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞானசம்பந்தம், தனியார் பள்ளியில் படித்து வந்த தனது மகளை, பதினொன்றாம் வகுப்புக்காக பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆக. 7) முறைப்படி சேர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “நான், எனது மனைவி ஆகியோர் அரசுப் பள்ளிகளில்தான் படித்து முன்னேறினோம். ஆகையால் எனது மகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என எண்ணியிருந்தோம். அதன்படி பழனியில் சிறப்பாக செய்லபட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இன்று (ஆக.7) என்னுடைய மகளை சேர்த்துள்ளேன்” என்றார்.
பாரத பிரதமரின் சிறந்த பள்ளி விருது, தமிழ்நாடு அரசின் பசுமை பள்ளி விருது உள்ளிட்டவைகளை பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வரவேற்கத்தக்கது - எம்.பி சுப்பராயன்