ETV Bharat / state

சாலை வசதி இல்லை: இறந்தவரின் உடலை 2 கிமீ தூரம் சுமந்துசென்ற கிராமத்தினர்! - The tragedy of carrying 2 km the body of the deceased

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இறந்தவரின் உடலை கிராம மக்கள் சுமந்து சென்றுள்ளனர்.

கொடைக்கானல்
கொடைக்கானல்
author img

By

Published : Feb 6, 2021, 1:45 PM IST

கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி கிராம பஞ்சாயத்துப் பகுதியில் பரப்பன்ஓடை பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 100 குடும்பத்தினருக்கும் மேல் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வேளாண்மையை முக்கியத் தொழிலாகச் செய்துவருகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்தப் பகுதிக்குச் சாலை வசதி இல்லை. இவர்கள் பயன்படுத்தும் மண்பாதை நடப்பதற்குப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் தனது தோட்டத்தில் உள்ள கிணற்று நீரை இந்த மண் பகுதியில் திறந்துவிடுவதால் இந்தப் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சிரமம் அடைந்துவருகின்றனர்.

கொடைக்கானல்
சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை 2 கிமீ துாக்கிச்சென்ற கிராம மக்கள்

உடல்நலம் குறைவு ஏற்பட்ட பெண்கள், முதியவர்களைக்கூட டோலிகட்டி கொடைக்கானல் மருத்துவமனைக்கு கொண்டுவரக்கூடிய அவலநிலையில் இருந்துவருகின்றனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த டெல்சி என்ற பெண் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். இவரது உடலை இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுமந்துசென்று பின்னர் லூர்துபுரம் பகுதியில் அடக்கம்செய்தனர்.

தொடர்ந்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இது பற்றி கொடைக்கானல் அரசு அலுவலர்களிடம் மனு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.

சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை 2 கிமீ துாக்கிச்சென்ற கிராம மக்கள்!

உடனடியாக இந்தப் பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சசிகலாவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - அதிமுக நிர்வாகி கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.