திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பண்ணபட்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள சந்தன வர்த்தினி ஆற்றில் தினமும் இரவு, பகலாக மணற்கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "எங்கள் பகுதி ஏற்கனவே வறட்சி மிகுந்த பகுதி. தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது போன்ற சூழலில், மணற்கொள்ளையில் ஈடுபடுவது முற்றிலும் நீர் ஆதாரத்தை அழிக்கும் செயலாகும். எனவே தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு மணற்கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.