திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக வனப்பாதுகாப்புப் படையினர் மூலம் மாவட்ட வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில் சிறுமலை பகுதியில் சிறுமலை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையிலான குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தவசிமடை, சவோரியர்பட்டி பகுதியைச் சார்ந்த அருள் பிரிட்டோ, பச்சையப்பன், ஸ்டீபன், மைக்கேல் ஜோ, பாஸ்கர் ஆகிய 5 பேரும் காட்டு மாட்டை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்த இறைச்சியும், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து இவர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தப்பியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காட்டு மாட்டை வேட்டையாடியவர்கள் கைது - காட்டு மாடு வேட்டையாடுதல்
திண்டுக்கல்: சிறுமலை வனப்பகுதியில் காட்டு மாட்டை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைசெய்த ஐந்து பேரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.