ETV Bharat / state

தம்பி முறையில் இருந்த நபருடன் ஏற்பட்ட தடம் மாறிய உறவு - கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்த பெண் - திண்டுக்கல் இரட்டை கொலை

திருமணத்தை மீறிய உறவால், கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்த நபரை, அவரது காதலன் மற்றும் கூட்டாளியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.

wife murdered his husband and mother in law  wife murdered his husband and mother in law in dindigul  dindigul double murder  wife murdered husband  கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்த பெண்  திண்டுக்கல் இரட்டை கொலை  இரட்டைக்கொலை சம்பவம்
கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்த பெண்
author img

By

Published : Apr 2, 2022, 11:08 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா, எரியோட்டை அடுத்த குருக்களையன்பட்டியைச் சேர்ந்தவர், விவசாயி செல்வராஜ் (40). இவர் அதே பகுதியிலுள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார். இவர் மார்ச் 31ஆம் தேதி அன்று, தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டில் தனது தாய் சௌந்தரம்மாள் (60) என்பவருடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று(ஏப். 01) காலை அவரது தோட்டத்து வீட்டுக்கு பால் கறப்பதற்காக பால்காரர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து எரியோடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இறந்து கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது செல்வராஜின் மனைவி சுபஹாசினியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், சுபஹாசினியின் அலைபேசியை சோதித்துள்ளனர். மேலும் அதில் அதிகாலை 5 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பை வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.

அதில், ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பி முறை வரும் கோபிகிருஷ்ணன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்தது. இதனால் கணவர் மற்றும் மாமியாரை கொல்வதற்கு சுபாஹசினி திட்டம் தீட்டியதும் அம்பலமானது.

இதையடுத்து கூட்டத்தோடு கூட்டமாக ஒன்றுமே தெரியாதது போல் நின்று கொண்டிருந்த கோபிகிருஷ்ணனை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், தனது நண்பர்களான ஆனந்த் மற்றும் உதயகுமார் கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்தனர். இரட்டைக் கொலை நடைபெற்று இருப்பது இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு காவல் துறையினரை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: 9 வயதிலிருந்து பாலியல் தொந்தரவு... இளம்பெண்ணின் தாய், அத்தை உள்ளிட்ட 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.