திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பொருளூர் ஊராட்சி குப்பாயிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னாத்தாளுடன் விவசாயி செல்லமுத்து தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் செல்லமுத்து தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு செல்லமுத்து தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வந்தவுடன் மனைவி பொன்னாத்தாளிடம் உணவு கேட்டு சண்டையிட்டுத் தாக்கியுள்ளார். தினமும் தகராறு செய்து கொண்டு வரும் கணவரை ஆத்திரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கோபத்தில் வீட்டில் வைத்திருந்த தேங்காய் எண்ணெய் எடுத்து அதை அடுப்பில் வைத்து சூடாக காய்ச்சி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செல்லமுத்து மீது கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெய்யை மேலே ஊற்றினார்.
இதில், செல்வமுத்துவிற்குப் பலத்த காயம் ஏற்பட்டு கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று செல்லத்துத்துவை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போதிய சிகிச்சை வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த மூன்று தினங்கள் அங்கே சிகிச்சைப் பெற்று வந்த செல்லமுத்து, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளிமந்தையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பொன்னாத்தாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்து பெண் கொலை.. 24 மணிநேரத்தில் குற்றவாளி கைது..