திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எட்டி குளத்துப்பட்டியைச்சேர்ந்தவர் ஆனந்த்(30). தனியார் சோலார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாடியுரைச் சேர்ந்த வீர அழகு என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இதனால் வீர அழகு தனது பெற்றோர் வீட்டிற்குச்சென்று தங்கினார். அதைத்தொடர்ந்து தனியார் பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கடந்த வாரம் ஆனந்த், வீர அழகுவைப் பார்க்க அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், வீரஅழகு அங்கு இல்லை. மாமனாரும் முறையான பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் ஆனந்தின் வாட்ஸ்அப் எண்ணிக்கிற்கு ஒரு செய்தி வருகிறது. அதில், வீரஅழகு தான் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னைத்தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் புதுமணத் தம்பதி போல புகைப்படம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மனைவியை வேறு ஒரு நபர் ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், அவரிடமிருந்து மனைவியை மீட்டுத்தருமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடத்த உத்தரவு