திண்டுக்கல் : கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவிடு, பேத்துப்பாறை, கே.சி. பட்டி பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
இங்கு அவரை, பலா, வாழை, காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. தொடர்ந்து இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியும், விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகிறது.
விலை நிலங்களுக்குள் யானை வராமல் அமைக்கப்படும் வேலிகளை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை விரட்ட பல முறை வனத்துறை அலுலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க : Video: அஸ்ஸாமில் காட்டு யானை மிதித்து ஒருவர் உயிரிழப்பு