திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி பகுதியான கூலம்பட்டி கிராமத்தில் சமுதாய கூடமும், மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டியும் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடமும், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நீர்தேக்க தொட்டியும் அமைப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் பாஸ்கரன், ஊராட்சி சேர்மன் மகேஸ்வரி, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், பாளையங்கோட்டை ஊராட்சி தலைவர் அழகுமலை, ஊராட்சி செயலர் வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
16.45 லட்சம் இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளனர் - மத்திய அரசு