திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள தலைமை குடிநீர் தேக்கம், நட்சத்திர ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள், ரோஜா தோட்டத்தில் பராமரிப்பு ஆகியவை குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் குறித்தும், தண்ணீர் கையிருப்பு குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக, நட்சத்திர ஏரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வக அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த இளநிலை சுற்றுச்சூழல் விஞ்ஞானி லட்சுமி தலைமையிலான அலுவலர்கள் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் நட்சத்திர ஏரி தண்ணீரின் தரம், தன்மை குறித்து அறிவதற்காக ஏரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாட்டில்களில் தண்ணீர் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தண்ணீர் மதுரையில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'தொழிலாளர் சட்டங்களில் சமரசம்' - ஆபத்தா, வளர்ச்சியா?