ETV Bharat / state

குடிநீர் இல்லாத தேசத்தில் ஆதார், ரேசன் கார்டு எதற்கு..? - மக்கள் கொதிப்பு - அனுமந்தராயன் கோட்டை

திண்டுக்கல்: "தண்ணீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் ஆதார், ரேசன் கார்டுகளை திருப்பி அளிப்போம்" என்று, அனுமந்தராயன் கோட்டை கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் பிரச்னை
author img

By

Published : May 27, 2019, 5:42 PM IST

திண்டுக்கலில் உள்ள அனுமந்தராயன் கோட்டை கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சில ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு அரசும், ஊராட்சி நிர்வாகமும் நிரந்தர தீர்வை எடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அதனால், தனியார் நிறுவனங்கள் விற்கும் கேன் வாட்டரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமந்தராயன் கோட்டை கிராம மக்கள், காலிக்குடங்களுடன் இன்று வந்தனர். குடிநீர் அளிக்காத அரசையும், கிராம நிர்வாக அலுவலர்களையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் இவர்களிடம் காவல்துறையினர் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

இது குறித்து அனுமந்தராயன் கோட்டை கிராம மக்கள் கூறுகையில்,"வறட்சியைக் காரணம் காட்டி அனுமந்தராயன் கோட்டை கிராமத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதில்லை. ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்கின்றனர். குடிப்பதற்கான நீரை பணம் கொடுத்து வாங்கி சமாளிக்கிறோம். ஆனால், பெண்களும், சிறுமிகளும் கழிப்பறையைப் பயன்படுத்தக்கூட தண்ணீருக்கு அல்லல்படும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வாய்ப்பிருந்தும், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. அடுத்த வாரத்தில் குடிநீருக்கு நிரந்தர தீர்வு எடுக்கவில்லை எனில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை அரசிடம் திருப்பியளிப்போம்" என்றார்.

இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:திண்டுக்கல் 27.5.19

50 நாட்களுக்கு ஒரு நாள் விநியோகம் செய்யப்படும் குடிநீர். குடிக்க நீர் இன்றி தவிக்கும் மக்கள்.

Body:திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை பகுதியில் 50 நாட்களுக்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் ஒரு குடம் நீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை தனியார் நிறுவனங்களிலிருந்து வாங்கி வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "50 நாட்களுக்கு ஒரு நாள் தண்ணீர் வந்தால் எப்படி நாங்கள் வாழ்வது. குடிக்க, குளிக்க என அனைத்திற்கும் விலை கொடுத்து நீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. அன்றாட பிழைப்பிற்கே வேலை இன்றி தவிக்கும் நாங்கள் எப்படி வீட்டின் அத்தியாவசிய தேவையான நீரை விலை கொடுத்து வாங்க முடியும். எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் நாங்கள் எங்களது ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.