திண்டுக்கல்: கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆண்கள் அறுவை சிகிச்சை பகுதி கழிவறை பகுதியிலிருந்து கழிவு நீர் நேரடியாக வெளியேறுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் இந்தக் கழிவு நீரை மிதித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சுகாதாரக் கேடுகள் நிறைந்துள்ளதால் கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளது.
இதற்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் 7ஆம் தேதி பொறுப்பேற்பு!