திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட 7 சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நேற்று (ஏப்.6) நடைபெற்றது.
இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுபு கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்பிற்கிடையே பாதுகாக்கப்பட்ட அறைகளில், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டது .
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அரைக்குத் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் அரசு அலுவலர்களால் 120க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலமாக அண்ணா பல்கலைக்கழக வளாகங்களில் இருக்கக்கூடிய அனைத்து அறைகள், முக்கிய பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.