திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவேகானந்தா வித்யாலய பள்ளி மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
தொடர்ந்து பல்வேறு தரப்பு மக்களுக்கு நிவாரணம் வழங்கிவரும் பள்ளி நிர்வாகம் பழங்குடி மக்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை நாள்தோறும் வழங்கிவருகிறது.