ETV Bharat / state

நிலக்கோட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை - நடவடிக்கை எடுக்குமா காவல் துறை?

நிலக்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிகளவு விற்பனை செய்யப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல் துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 8, 2022, 10:33 PM IST

திண்டுக்கல்: நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அணைப்பட்டி, விளாம்பட்டி, கொடைரோடு, பட்டிவீரன்பட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளான கேரளா லட்டரிகள் மற்றும் சிங்கம், டியர், தங்கம், குயில், நல்லநேரம், மணி, விஷ்ணு, மயில், மான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் ஆன்லைன் லாட்டரிகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வத்தலக்குண்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், நிலக்கோட்டை பூ மார்க்கெட், பள்ளிகள், மருத்துவமனைகள், டீக்கடை, பேக்கரி உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த லாட்டரிகளுக்கு ஆன்லைனில் மூலம் ரிசல்ட் பார்த்து உரியவர்களிடம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால், இந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் லாட்டரி சீட்டுகளை வாங்கி வாழ்க்கையை சீரழித்து வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையிடம் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

லாட்டரி சீட்டுகள் விற்பனை

தற்போது, நிலக்கோட்டையில் அணைப்பட்டி சாலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து, இது குறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு அடி, உதை : தடுக்க முயன்ற மாமியார் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.