ETV Bharat / state

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா? - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தப்போவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா?
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா?
author img

By

Published : Aug 15, 2020, 9:25 AM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு தடையை மீறி ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "பக்ரீத், பனி மாதா ஊர்வலம் உள்ளிட்ட விழாவிற்கு அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்து மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்‌.

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா?
கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இம்முறை தடையை மீறி ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.
அரசு இந்துக்களிடம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. கரோனா பாதிப்பால் மக்கள் மிகுந்த அச்சத்துடனும் மனகனத்துடனும் இருக்கிறார்கள்.
இந்த வேளையில் விநாயகரை வழிபடுவதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். எனவே அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து கோயிலையும் திறக்க வேண்டும். ஏனெனில் டாஸ்மாக் கடைகளின் மூலம் பரவாத கரோனா கோயிலின் மூலம் மட்டும் பரவுமா?. உண்மையில் முதலமைச்சர் கடவுள் நம்பிக்கை கொண்டவரா?. ஓட்டுக்காக பயந்துகொண்டு அவர் நாத்திகவாதிகளின் அறிவுரையை ஏற்று இந்த வேலையை செய்கிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் விநாயகரை வழிபட வேண்டும்’ - இந்து முன்னணி கட்சி கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.