ETV Bharat / state

"காவல்துறை நினைத்தால் ஒரே நாளில் குட்காவை ஒழிக்கலாம்" - விக்கிரமராஜா - Vikramaraja said that Tamil Nadu police

காவல்துறையால் ஒரேநாளில் குட்கா இல்லாத தமிழ்நாடாக மாற்ற முடியும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 11, 2022, 6:23 AM IST

திண்டுக்கல்: பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 2ஆம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. நகர தலைவர் ஜேபி சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.

கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட வணிகர் சங்கத்தை இரண்டாகப் பிரித்து பழனியை தலைமையாக கொண்டு புதிய வணிகர் சங்க மாவட்டம் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என‌வும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழ்நாடு முதலமைச்சரிடம் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள வணிக நிறுவனங்களின் மின்கட்டணத்தில் 15சதவிகிதம் குறைத்து அறிவித்துள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

குறைந்த மின்கட்டணம்: அதேவேளையில் இரவு,பகல் என மின்கட்டணத்தின் அளவை பிரிக்காமல் ஒரே சீரான மின்கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை கடையாக சென்று வியாபாரிகளை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார். பொருட்கள் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள் செய்த தவறுகளுக்கும் வியாபாரிகள்தான் பொறுப்பு எனக்கூறி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப் போவதாவும் தெரிவித்தார்.

"காவல்துறை நினைத்தால் ஒரே நாளில் குட்காவை ஒழிக்கலாம்" - விக்கிரமராஜா

அரசுக்கு நன்றி: அதேபோல, இரண்டரை ஆண்டுகளாக கரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்து மீள்வதற்காக விழிபிதுங்கி கொண்டிருக்கும் வியாபாரிகளை, தமிழ்நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ள வணிகவரித்துறை அதிகாரிகள் கடைகடையாக சென்று சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாகவும், இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று வியாபாரிகளை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்று நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள கடை வாடகை சீர்செய்யும் கமிட்டியில் வணிகர் சங்க நிர்வாகிகளையும் உறுப்பினராக சேர்த்து அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

வலியுறுத்தல்: தொடர்ந்து டீக்கடைகளில் டீயின் விலை உயர்த்தப்பட்டதற்கு ஆவின் பால் விலை உயர்வு மட்டும் காரணமல்ல, வணிகவரி, கட்டிட வரி, வாடகை, கேஸ் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் டீ-ன் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். அரிசிக்கு விதித்துள்ள 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது வணிகர் சங்க நிர்வாகிகள் டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அரிசி, கடுகு, மிளகு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வலியுறுத்தப்படும் என்றும், மத்திய அரசும் இதுகுறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்‌.

தமிழ்நாட்டில் குட்கா பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் நபர்கள் யார் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றாக தெரியும் என்றும், தமிழ்நாடு காவல்துறை சரியாக செயல்பட்டால் தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் குட்கா புகையிலை இல்லாத மாநிலமாக மாற்றமுடியும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: டெண்டர் எடுப்பதில் தகராறு; ஒன்றிய அலுவலகத்தில் திமுக - அதிமுக மோதல்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.