திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (42). இவர் கொடைக்கானல் மைக்செட் ஆடியோஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூன். 13) இரவு குடும்ப பிரச்னை காரணமாக ஒரு வீடியோ ஒன்றை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை கண்ட காவல் துறையினர், ஜெயசந்திரனை பல இடங்களில் தேடி வந்தனர். கொடைக்கானல் ஏரியின் கரைப் பகுதியில் இவரது காலணிகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் இணைந்து இரண்டு படகுகள் மூலம் வெகு நேரமாக தேடினர். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஜெயசந்திரன் என்னும் ஜெசிந்திரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் நள்ளிரவு ஒரு மணியளவில் கொடைக்கானல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாஸ்க் போடாதவர்களுக்கு மரண பயம் காட்டிய ஊராட்சி