சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த, வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, கொடைக்கானலில் வாக்காளர் பட்டியலில் கடந்த வருடம் இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதும், ஒரே பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள எண்களும், குடும்ப உறுப்பினர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இது அந்தப் பகுதியில் பெரும் குழப்பத்தையும் குளறுபடியும் ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் ஆகிய முகாம்கள் நடைபெறும் வேளையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அலட்சியம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை அரசு உடனே கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 5 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்