ஐதராபாத்: அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அடுத்த வாரம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணி நிர்வாகமும், தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டது.
சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷ பத்திரனா, எம்.எஸ் தோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தக்கவைத்தது போக தற்போது சென்னை அணி கைவசம் 55 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. அதேநேரம் நட்சத்திர வீரர்களையும் சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சென்னை அணியில் இன்னும் எத்தனை பேர் வேண்டும் என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம். சென்னை அணிக்கு மொத்தம் 25 பேர் தேவைப்படுகின்றனர். அதில் எம்.எஸ் தோனி, ருதுராஜ் ஜெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா உள்பட 5 பேர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 20 பேர் அணியில் தேவைப்படுகின்றனர்.
சென்னை அணியிடம் கையிருப்பாக 55 கோடி ரூபாயும், ஒரேயொரு ஆர்டிஎம் கார்டு மட்டுமே உள்ளது. சென்னை அணிக்கு வலுசேர்த்த முக்கிய வீரர்கள் மொயின் அலி, தீபக் சஹர், டிவென் கான்வாய் உள்ளிட்ட வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் தோனிக்கு அடுத்ததாக அணியில் நல்ல விக்கெட் கீப்பரை தேடும் நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது. அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போதைய மெகா ஏலத்திலேயே கே.எல் ராகுல் அல்லது ரிஷப் பன்ட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை அணியில் எடுத்துப் போட வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க கல்வி அமைச்சராகும் WWE பிரபலம்! யார் தெரியுமா?