சென்னை: பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வி.டி.ராஜசேகர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளருமான வி.டி. ராஜசேகர், தலித் வாய்ஸ் என்ற பத்திரிகையை ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக நடத்தி வந்தார். 93 வயதான அவர் அண்மைகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The passing of renowned journalist, writer, and thinker, V.T. Rajshekar marks the loss of a bold and uncompromising voice against caste oppression.
— M.K.Stalin (@mkstalin) November 20, 2024
Through Dalit Voice, he shaped intellectual discourse and amplified marginalised voices. His dedication to social justice and the…
வி.டி. ராஜசேகர், கர்நாடக பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆக இருந்தவர், இந்திய சீன நட்புறவுக் கழக அமைப்பாளர், பெங்களூரூ துளு கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். வி.டி.ராஜசேகர் மறைவுக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். வி.டி. ராஜசேகரின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான ஒந்திபெட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "புகழ்பெற்ற பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் வி.டி.ராஜசேகர் மறைந்தது ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தைரியமான மற்றும் சமரசமற்ற குரலை இழப்பது போலாகும்.
தலித் குரல் மூலம், அவர் அறிவார்ந்த சொற்பொழிவை வடிவமைத்தார் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் சார்பாக ஓங்கி குரல் கொடுத்தவர். சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சாதி பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டம் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தது. அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்