ராஞ்சி: ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் மாலை ஐந்து மணிவரை 67.59 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில், பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சிகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் (பர்ஹைத் தொகுதி), அவரது மனைவி கல்பனா சோரன் (ஜேஎம்எம்), எதிர்க்கட்சித் தலைவர் அமர் குமார் பவுரி (பாஜக) ஆகியோர் இந்த இரண்டாம் கட்ட தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.இரண்டாம் கட்ட தேர்தலில் 1.23 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 528 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடந்தது. அதனை தொடர்ந்து இன்று (நவ.20) இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. 38 தொகுதிகளில் மொத்தம் 14,218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 31 வாக்குச்சாவடிகளில் மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. பிற வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டத்தேர்தலில் மாலை 5 மணி வரை 67.59 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்