ETV Bharat / state

2023 புது வருஷம்; தப்பு நடக்காம இருக்க 'அவன் இவன்' திரைப்பட பாணியில் கறி விருந்து போட்ட போலீசார்! - crime incidents in Dindigul

2023 புத்தாண்டில் கொள்ளை, கொலை, அடிதடி, விபத்து உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று திண்டுக்கல் அருகே அய்யலூரில் வண்டி கருப்பண்ணசாமி கோவிலில் வடமதுரை போலீசார் கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 2, 2023, 10:48 PM IST

2023 புது வருஷம்; தப்பு நடக்காம இருக்க 'அவன் இவன்' பட பாணியில் கறி விருந்து போட்ட போலீசார்!

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா, அய்யலூரில் காவல் தெய்வமான வண்டி கருப்பண்ணசாமி கோவில் (Sri Vandi KaruppanaSwamy Temple Ayyalur) உள்ளது. இங்கு புதிதாக வாகனம் வாங்குவோர், தங்கள் வாகனங்களைக் கொண்டுவந்து வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல, ஏனையப் பிற வாகன ஓட்டிகளும் இங்கு வந்து வழிபாடு செய்துவிட்டு தங்கள் பயணத்தைத் தொடங்குவதும் உண்டு.

2023 புது வருடத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், கொலை, கொள்ளை, விபத்து போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டியும் வடமதுரை காவல்துறையினர் அய்யலூர் வண்டி கருப்பண்ணசாமி கோவிலில், பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். அதன்பின்னர் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.

விஷால், ஆர்யா ஆகியோர் நடித்த அவன் இவன் படத்தில் வரும் ஒரு காட்சியைப் போல நடந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழிபாட்டில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் வடமதுரை காவல் ஆய்வாளர் ஜோதிமுருகன், வடமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'புத்தாண்டு பாதுகாப்பு' காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.