திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியைச் சேர்ந்த அலமேலு, சத்திரப்பட்டியைச் சேர்ந்த விஜயா ஆகியோர் நூற்பாலை வேலைக்காக சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து சேலம் நோக்கி ஓட்டுநர் முனிஸ்குமார் என்பவர் லாரியை ஓட்டிவந்தார்.
திடீரென தூக்க கலக்கத்தின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நடந்து சென்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீதும் மோதியது. இதில் அலமேலு சம்பவ இடத்திலேயே பலியாகினார். பலத்த காயமடைந்த விஜயா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநர் முனீஸ்குமார் வேடசந்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : ’தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை’ - மகேஷ்குமார் அகர்வால்