ETV Bharat / state

தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது - கொடைக்கான‌ல்

திண்டுக்க‌ல்: கொடைக்கான‌லில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் தொட‌ர் திருட்டில் ஈடுப‌ட்ட‌ வேலூரைச் சேர்ந்த‌ ப‌க்ரூதின், ஜெய்லானி ஆகிய‌ இருவ‌ரை காவல் துறையினர் கைது செய்த‌ன‌ர்.

தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
author img

By

Published : Apr 10, 2021, 9:54 AM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம், கொடைக்கான‌லில் கடைக‌ள், கோயில்க‌ள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வ‌ருவ‌தாக‌ புகார்கள் எழுந்து வ‌ந்தன. இச்சூழலில், நேற்று (ஏப்.09) கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள‌ பிரதான‌ தேவால‌ய‌த்தில் மாலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட‌ வேலூரைச் சேர்ந்த‌ ப‌க்ரூதின், ஜெய்லானி ஆகிய‌ இருவரையும் பொது மக்கள் கையும்களவுமாகப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தாக் அதிர்ச்சியடைந்த‌ சுற்றுலா வ‌ழிகாட்டிக‌ள், ப‌க்ரூதின், ஜெய்லானி இருவ‌ரையும் பிடித்து கொடைக்கான‌ல் காவல் துறையினரிட‌ம் ஒப்ப‌டைத்தன‌ர். தொட‌ர்ந்து இவர்கள் இருவ‌ரையும் கைது செய்த‌ காவல் துறையினர் வ‌ழ‌க்குப்ப‌திவு செய்து விசார‌ணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இருவரும்‌ ப‌ல்வேறு இடங்களில் தொட‌ர் திருட்டில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: சித்திரை திருவிழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - மதுரை ஆட்சியர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.