திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் சுப்பையா. அவரது மனைவி பாலுத்தாய். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பல ஏழைக் குடும்பங்களிடம் பணம் கொடுத்து அடமானமாக ரேஷன் அட்டைகளைைப் பெற்றுள்ளனர்.
அந்த அட்டைகளின் மூலம், ரேஷன் கடையில் அரிசி வாங்கி, அதனை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவந்துள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 300கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, அவர்களைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க...டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் தமிழ்நாடு வந்தடைவர் - அமைச்சர் கோபால் ராய்