ETV Bharat / state

'அதிமுகவினர் மீதே எடப்பாடிக்கு நம்பிக்கை இல்லை' - டிடிவி தினகரன் சாடல் - ttv dinakaran

திண்டுக்கல்: வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் முதலமைச்சர் தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது நம்பிக்கையின்மையே காட்டுகிறது என்றும் துரோகம் செய்தவர்களை தொண்டர்கள் அறிவார்கள் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran
author img

By

Published : Aug 28, 2019, 3:46 PM IST

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டை அதிகப்படுத்தினால் நல்லது என்றும் இது அரசியலாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருவதாகவும், ஆட்சி இருப்பதால் அதிமுக மூட்டை போல உள்ளது, அவிழ்த்து விட்டால் அது நெல்லிகாய் மூட்டை என்பது தெரியவரும் எனவும் கேலி செய்தார்.

வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் முதலமைச்சர் தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது நம்பிக்கையின்மையே காட்டுகிறது என்றும் அவரது கட்சியினர் மீது அவருக்கே நம்பிக்கை கிடையாது என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டதாகவும் சாடினார்.

அமமுகவை கட்சியாக பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருவதாகவும், ஒரே சின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம் என்றும் கூறினார்.

Intro:திண்டுக்கல் 28.08.19

வெளிநாடு பயணம் செல்லும் முதலமைச்சர் பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது பயத்தின் காரணமாகத் தான் : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி

Body:திண்டுக்கல் வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் வெளிநாடு பயணம் தமிழகத்திற்கு முதலீடை அதிகபடுத்தினால் நல்லது. அது தவறு இல்லை ஆனால் இது அரசியலாக இருக்க கூடாது. ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருகிறது.

மேலும் ஆட்சி இருப்பதால் அதிமுக மூட்டை போல உள்ளது. ஆனால் அவிழ்த்து விட்டால் அது நெல்லிகாய் மூட்டை என்பது தெரியும். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் போது பொறுப்புக்களை ஒப்படைக்காமல் சென்றது அவரது பயத்தினால் தான். அவரது கட்சியினர் மீது அவருக்கு நம்பிக்கை கிடையாது. அமமுக கட்சியை பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறோம். அப்படி ஒரேசின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தில் அரசாங்கத்தை மீறி காவல்துறை தனது பணியை செய்யவேண்டும் அவ்வாறு செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். ஒபிஎஸ் அணி - ஈபிஎஸ் அணி உள்ளங்களால் இணையவில்லை.
ஏப்ரல் மே மாதங்களில் தான் குடிமராமத்து பணிகளை செய்திருக்க இருக்க வேண்டும் காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட பின்பு குடி மராமத்து பணி நடப்பது என்பது சாத்தியமில்லாதது. இந்தியாவின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் சேர்ந்து செயல்பட வேண்டும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்டு இருக்க வேண்டும் காஷ்மீரை மீட்க அதுபோல் கச்சத் தீவையும் மீட்டால் மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.