திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மாரம்பாடி ஊராட்சி நந்தி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சேவியர் (40). இவரது மனைவி அருள்அரசி, சேவியர் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு சோப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு லெனின் கிரீஸ் (10) மற்றும் சந்தோஷ் (7)ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சேவியர் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கிளம்பிய பொழுது, இரண்டு மகன்களும் வீட்டிலிருந்தால் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று மூத்த மகனான லெனின் கிரீசை வீட்டில் விட்டுவிட்டு இளைய மகனை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.
மீண்டும் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறமாக உள்ள வேப்ப மரத்தில் சேலையால் கட்டியிருந்த தூரியில் கழுத்து மாடிய நிலையில் லெனின் கிரீஸ் தொங்கிக் கொண்டிருந்ததை அடுத்து, உடனடியாக அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு லெனின் கிரீசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வீட்டில் தூரி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொப்புள் கொடி காயும் முன் பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய கொடூரம்