திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே நேற்று (ஏப்.11) மாலை முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் வத்தலகுண்டு செல்லக்கூடிய முக்கிய பிரதான சாலையான டம்டம் பாறை அருகே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இறுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து மரத்தை அகற்றினர்.
விபத்துகள் நிகழ வாய்ய்ப்பிருப்பதால் சாலை ஓரங்களில் உள்ள ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - ரேலா மருத்துவமனை