ETV Bharat / state

தடையை மீறி வந்த சுற்றுலாப் பயணிகள் - திருப்பி அனுப்பிய அலுவலர்கள்! - tourist send back from kodaikanal

திண்டுக்கல்: தடையை மீறி கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் திரும்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்‌.

தடையை மீறி வந்த சுற்றுலாப்பயணிகள்
தடையை மீறி வந்த சுற்றுலாப்பயணிகள்
author img

By

Published : Sep 6, 2020, 7:14 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று விதிக்கப்பட்ட முழு ஊரடங்குக்கு இந்த மாதம் முதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் மக்களின் நடமாட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதன் காரணமாக தற்போது கொடைக்கானலுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா எதிரொலியால் வெள்ளிநீர் வீழ்ச்சி நுழைவு பகுதியில் கடும் சோதனைக்கு பிறகே கொடைக்கானல் பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மலைப்பிரதேசம் என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வர தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கொடைக்கானல் வருவதற்கு இ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், தடையை மீறி தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அவர்களை நுழைவாயில் பகுதியில் இருந்த அலுவலர்கள் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர்‌. இதனால் நுழைவாயிலில் வாகனங்களுடன் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: விவசாய உதவித் திட்ட மோசடி - அனைத்து ஆட்சியர்களிடமும் மனு அளிக்க பாஜக திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.