தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி கொடைக்கானலில் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
அதைத் தொடர்ந்து, வார விடுமுறையான இன்று (அக்டோபர் 17) சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென கொடைக்கானல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முக்கிய சுற்றுலா தளங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மழையின் காரணமாக பூங்காக்களைக் கூட ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க:கொடைக்கானலில் அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்