திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையானது தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தையாகும். இங்கிருந்து காய்கறிகள் பெங்களூர், ஆந்திரம், கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படும்.
இந்நிலையில் தற்போது போதிய மழை இல்லாததால் விவசாயப் பணிகள் தொய்வடைந்து தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வெளியூர்களில் இருந்து வந்துகொண்டிருந்த தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் தற்போது ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் விளையும் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் கடந்த வாரம் ஒரு பெட்டி தக்காளி, 14 கிலோ ரூ.80 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. தற்போது வரத்து குறைவால் 10ரூபாய் முதல் 15 ரூபாய் அதிகரித்து 110ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை அதிகரித்துள்ளதால் உள்ளூர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.