திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பது, பேரிஜம் ஏரி. கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் பேரிஜம் ஏரிக்கு செல்வது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பேரிஜம் ஏரியில் புதிதாக பரிசல் சவாரி வனத்துறை சார்பாக தொடங்கப்பட்டது. தற்போது இந்த பரிசல் சவாரிக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
ஏனென்றால், பேரிஜம் ஏரியிலிருந்து செல்லக்கூடிய நீர்தான் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், ஆசியாவிலேயே இரண்டாவது நன்னீர் ஏரியாகவும் இருப்பது, பேரிஜம் ஏரி. இங்கு பரிசல் சவாரிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் பொழுது, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தன் அடிப்படையில், பரிசல் சவாரியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் பகுதி மக்களும் கோரிக்கை வைத்தனர்.
-
குடிநீர் ஆதாரத்தை பாதிக்காத வண்ணம், பேரிஜம் ஏரியில் படகு சவாரிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/6wZQVgTUuL
— Vijayakant (@iVijayakant) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">குடிநீர் ஆதாரத்தை பாதிக்காத வண்ணம், பேரிஜம் ஏரியில் படகு சவாரிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/6wZQVgTUuL
— Vijayakant (@iVijayakant) September 30, 2023குடிநீர் ஆதாரத்தை பாதிக்காத வண்ணம், பேரிஜம் ஏரியில் படகு சவாரிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/6wZQVgTUuL
— Vijayakant (@iVijayakant) September 30, 2023
மேலும், நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடனடியாக பரிசல் சவாரியை நிறுத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்து பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நன்னீர் ஏரியில் பரிசல் சவாரி மேற்கொள்வது குறித்து உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கான தேவையை உடனடியாக செய்து கொடுப்போம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் போராடும் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படுமா? - தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பதில்!