திண்டுக்கல்: மசாஜ் சென்டர் நடத்துகிறோம் என்ற பெயரில் சில தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், தனிப்பிரிவு காவல் துறையினர் தனியார் விடுதி, மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட வெளிமாநில அழகிகள் அறுவர் உள்பட 9 பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறை கைதுசெய்தது.
காவல் துறை வழக்குப்பதிவு
இது குறித்து நகர் வடக்கு காவல் துறை வழக்குப்பதிவு தனியார் தங்கும் விடுதியை நடத்திவரும் உரிமையாளர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றது. மேலும் தனியார் விடுதியின் உரிமையாளர் உள்பட இருவரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்