திண்டுக்கல்: திண்டுக்கல் ராமநாதபுரம் பகுதியில் பெயிண்டிங் தொழில் செய்துவருபவர் திருப்பதி. இவர் கொண்ணாம்பட்டி பிரிவு தம்மனம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க நின்றிருந்தபோது, திடீரென இடி தாக்கியுள்ளது. இதில் அவர் அருகில் நின்றுகொண்டிருந்த ஈஸ்வரி (50) என்ற பெண் மீதும் இடி தாக்கியுள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக வேடசந்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இருவரையும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: Pandora Papers: இந்திய பிரபலங்களின் முகத்திரையைக் கிழித்த பண்டோரா ஆவணங்கள்