திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில்கள் கடத்தல் நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.
சோதனையில், இவர்கள் கர்நாடகவிலிருந்து கடத்திவந்த இரண்டாயிரத்து 880 மதுபாட்டில்கள் பிடிபட்டன. வாகனத்தில் இருந்த மூவரை விசாரித்தபோது அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (30), பால் பெர்னாண்டஸ் (33), பெங்களூரைச் சேர்ந்த சேக்சல்மான் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், கடத்தப்பட்ட மதுபாட்டில்கள், டாடா ஏசி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.