ETV Bharat / state

பழனியில் கர்ப்பிணி தற்கொலை - மரணத்தில் சந்தேகமுள்ளது என தாய் உருக்கம்! - palani

பழனியில் மூன்று மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனியில் 3 மாத கர்ப்பிணி தற்கொலை
பழனியில் 3 மாத கர்ப்பிணி தற்கொலை
author img

By

Published : Apr 20, 2023, 10:29 PM IST

உயிரிழந்தவரின் தாயார் அளித்த பேட்டி

திண்டுக்கல்: பழனி அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர், சாகுல் ஹமீது. இவருடைய மனைவி பெனாசீர் சித்திகா (24). இவர்களுக்குத் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், நேற்று இரவு பெனாசீர் சித்திகா தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், பழனி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இதனிடையே இது குறித்து தற்கொலை செய்து கொண்ட பெனாசீர் சித்திகாவின் தாயார் அரக்காஸ் அம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது மகளுக்குத் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை எனது மகளை சந்தித்தபோது, தான் மூன்று மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சாகுல் ஹமீது, அவரது தாய் மற்றும் தந்தை அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதனால், சில நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தோம். மாமனாருக்கு கால் வலி ஏற்பட்டால், எனது மகளை கால்களை பிடித்து விடச்சொல்லி டார்ச்சர் செய்வதாக அடிக்கடி என் மகள் கூறி வந்தார்.

இந்த நிலையில் எனது மருமகனின் உறவினரான பரிதா என்பவர், அடிக்கடி வீட்டிற்கு வந்து, சில விஷயங்கள் பேசுவதாகவும், அதிலும், சாகுல் ஹமீதை தனியாக அழைத்துச்சென்று பேசுவதுமாகவும் இருந்துள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது மகனை பார்த்துக் கொள்ளுமாறும் என்னுடைய மகள் கூறிக் கொண்டே வந்தார்.

இந்த நிலையில் எனது மகள், நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார்கள். ஆனால், என் மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. என் மகளின் மாமனார், மாமியார் மற்றும் எனது மருமகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” என வேதனைபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கையை வீடியோ எடுத்து மிரட்டல்.. திருச்சியில் 6 பேர் கொண்ட கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.