ETV Bharat / state

செல்போன் திருடிய நபரை அடித்து கொலை செய்து உடலை பாலத்துக்கு அடியில் வீசிய மூவர் கைது! - Three arrested for beating the youth to death

Dindugul crime news: பழனி பகுதியில் மொபைல் போன் திருடிய நபரை ஒரு வாரமாக நோட்டமிட்டு, கொலை செய்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

செல்போன் திருடிய நபரை அடித்து கொலை செய்து உடலை பாலத்துக்கு அடியில் வீசிய மூவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 10:32 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் கிராமத்தில் சண்முக நதி ஆற்றுப் பாலத்திற்கு அடியில் நேற்று முன்தினம் சிவா என்ற இளைஞரின் உடல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். பின்னர், உடலைக் கைபற்றிய போலீசார், கொலை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் பழனியை அடுத்துள்ள வண்டி வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அருண், விக்னேஷ், சிவா ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்து இளைஞர் சிவாவை அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் பாரில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது!

பின்னர் கொலை குறித்த காரணங்களை விசாரிக்கையில், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த அருண்குமாரின் செல்போனை சிவா பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து செல்போனைக் கேட்டு அருண்குமார் தனது நண்பர்களுடன் சென்று சிவாவை ஒரு வாரமாக தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், சிவா எப்போதும் நண்பர்கள் கூட்டத்திலே இருந்ததால் மூவரும் திரும்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 12ஆம் தேதி மாலை, சிவா மானூர் ஆற்றுப் பாலத்தில் தனியாக மது அருந்திக் கொண்டிருந்தபோது செல்போனைக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூவரும் சேர்ந்து சிவாவை தாக்கி உள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த சிவா உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உடலை ஆற்றுப்பாலத்துக்கு அடியில் போட்டுச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கொலை தொடர்பாக மூவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை செய்யபட்ட சிவா மீது கீரனூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாட்றம்பள்ளி அருகே பெண் தர மறுத்ததால் கல்லூரி மாணவி கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.