ETV Bharat / state

திண்டுக்கல்லில் முதன்முறையாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் - Thottanoothu Sri Lankan Tamil Rehabilitation

தமிழகத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 14, 2022, 5:58 PM IST

திண்டுக்கல்: தமிழகத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தபடி இன்று (செப்.14) திண்டுக்கலில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் திறக்கப்பட்டது.

திண்டுக்கல் அடுத்த தோட்டனூத்தில் ரூ.17 கோடியே 17 லட்சத்திலான 321 தனித்தனி வீடுகளைக் கொண்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். இந்த மறுவாழ்வு முகாமில் கூடுதலாக குடிநீர், அங்கன்வாடி மையம், நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, குளியலறை, சமுதாயக்கூடம், பூங்கா, மைதானம் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம்

இத்திறப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் விசாகன், மற்றும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குலசை தசரா விழாவில் ஆடல் பாடலுக்குத் தடை - உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.