ETV Bharat / state

இந்து கோவில் பற்றி சர்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்! - இந்து கோவில் சர்ச்சை பேச்சு: திருமாவளவன்

திண்டுக்கல்: இந்து கோவில்களின் வடிவமைப்பை இழிவுபடுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருமாவளவன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Police Station
author img

By

Published : Nov 15, 2019, 4:31 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாணார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் இந்து முன்னணி இயக்கத்தின் சாணார்பட்டி ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

பார்த்திபன் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறிருப்பதாவது, கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கோவில்களின் வடிவமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

திருமாவளவன் மீது சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார்

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கபட்டிருந்தது. இப்புகார் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

தமிழ்நாடு அரசு மதத்தின் பிடியில் இருக்கிறது -திருமாவளவன் சாடல்!

Intro:திண்டுக்கல் 15.11.19

இந்துக் கோவில்களின் வடிவமைப்பை இழிவுபடுத்தி பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Body:கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கோவில்களின் வடிவமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியும் அவர்களின் மதவுணர்வை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாணார்பட்டியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.