ETV Bharat / state

திண்டுக்கல்லில் திருடனை விரட்டிப் பிடித்த 'ரியல் சிங்கம்' - காவலருக்கு மக்கள் பாராட்டு - திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் திருடிய திருடன் கைது

திண்டுக்கல்: ஓடும் பேருந்தில் பயணியிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி பணம் பறித்தவனை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

theft man attacked people
theft man attacked people
author img

By

Published : Dec 12, 2019, 5:28 PM IST

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அஞ்சலி ரவுண்டானா பகுதியில் பேருந்து சென்றபோது அதில் பயணம் செய்த ஒரு இளைஞர் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, பயணி ஒருவரிடம் 500 ரூபாயை பறித்துக் கொண்டு, பேருந்திலிருந்து குதித்து ஓடினார்.

இந்நிலையில், பேருந்தில் பயணித்த ஒட்டன்சத்திரம் போக்குவரத்துக் காவலரான கார்த்தி, பேருந்திலிருந்து குதித்து திருடனை விரட்டிச் சென்று பிடித்தார். இதனையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் பணம் பறித்த திருடனை பிடித்து, வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பிடிபட்ட திருடனை விசாரித்ததில் பெயர் மற்றும் ஊரை மாற்றி, மாற்றி கூறியுள்ளான்.

திருடனை அடித்து துவைக்கும் பொது மக்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல் நிலைய காவல் துறையினர், திருடனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்திலிருந்து குதித்து திருடனைப் பிடித்த காவலர் கார்த்திக்கை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இதையும் படிங்க: மதுரை சுங்க கட்டண மையம் விவகாரம்: அரசு தரப்பிற்கு கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

Intro:திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவனை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Body:திண்டுக்கல். 12.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவனை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அஞ்சலி ரவுண்டானா பகுதியில் பேருந்து வந்தபோது அதில் பயணம் செய்த ஒரு இளைஞர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பயணி ஒருவரிடம் 500 ரூபாயை பறித்து கொண்டு பேருந்திலிருந்து குதித்து ஓடினார். இதனை கண்ட பேருந்தில் பயணம் செய்த. ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவலரான கார்த்தி என்பவர் பேருந்தில் இருந்து குதித்து திருடனை விரட்டி சென்று பிடித்தார். இதையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் பணம் பறித்த திருடனை பிடித்து வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பெயர் மற்றும் ஊரை திருடன் மாற்றி மாற்றி கூறிவந்த நிலையில் அங்கு வந்த தாடிக்கொம்பு காவல் நிலைய காவல் துறையினர் அவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இருந்து குதித்து திருடனை பிடித்த காவலர் கார்த்திகை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.Conclusion:திண்டுக்கல். 12.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவனை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.