ETV Bharat / state

திண்டுக்கல் குழந்தைகள் கரோனா சிறப்பு வார்டில் திருட்டு!

திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தில் புதிதாக குழந்தைகளுக்காக கட்டப்பட்ட கரோனா சிறப்பு வார்டில் 60 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயுள்ளன.

திண்டுக்கல் குழந்தைகள் கரோனா சிறப்பு வார்டில் திருட்டு

author img

By

Published : Nov 25, 2021, 7:45 PM IST

திண்டுக்கல்: கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனச் சுகாதார அமைப்புகள் தெரிவித்ததை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில் திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்துக்குள் 75 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் கட்டப்பட்டது. இந்த மையம் கரோனா மூன்றாவது கட்டத்தை எட்டாத நிலையில் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த சிறப்பு மையத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனிடையே நேற்று (நவ.24) இரவு நேரத்தில் சிறப்பு மையத்தில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இணைக்கும் நான்கு சிலிண்டர் இணைப்பு வால்வுகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை நலப் பணிகள் இணை இயக்குனர் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சிறப்பு மையம் கட்டப்பட்டுள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே உள்ள கட்டடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதால், அந்தக் கட்டடங்களில் தற்போது மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் எனப் பல்வேறு சமூக சீர்கேடுகள் நிறைந்த செயல்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே காவலர்கள் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: எங்களையும் கொஞ்சம் திரும்பி பாருங்க.. வட சென்னை மீனவர்களின் குரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.