ETV Bharat / state

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வீட்டில் கொள்ளை!

திண்டுக்கல்: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன்
author img

By

Published : Apr 26, 2019, 9:33 PM IST

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இளைய மகன் வெங்கடேசன், திண்டுக்கல்லில் உள்ள மெண்டோசா காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றுவிட்டு இன்று அதிகாலை வெங்கடேசன் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் மகனின் வீட்டின் முன்பு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சென்ற போது அங்கிருந்த காவல்துறையினர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:திண்டுக்கல் 26.4.19 திண்டுக்கல்லில் தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மகன் வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளை.

Body:தமிழக வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசன் இருந்து வருகிறார். இவரது இளைய மகன் வெங்கடேசன். இவர் திண்டுக்கல்லில் உள்ள மெண்டோசா காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அமைச்சர் மகன் வீட்டின் முன்பு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சென்ற போது அங்கிருந்த காவல்துறையினர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.