திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்க நகைக்கடையில் பழனி கோட்டைமேட்டு தெருவைச் சேர்ந்த லதா என்பவர் இஸ்லாமிய பெண்கள் அணியும் குர்கா ஆடையை அணிந்துச் சென்று நகை வாங்குவது போல நடித்துள்ளார். அப்போது, ஊழியர்களை திசை திருப்பி தங்கச் சங்கிலியை திருடி உடைக்குள் மறைத்து வைத்துள்ளார்.
அவருக்கு காட்டிய நகைகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைவதை அறிந்த கடை ஊழியர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தபோது தங்க சங்கிலியை லதா உடைக்குள் மறைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்த ஊழியர்கள், அவரை பழனி நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ஆடு திருடிய 4 இளைஞர்கள் கைது!