திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் உள்ளது, அம்பிளிக்கை காவல்நிலையம். இந்த காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், சவடமுத்து. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொசவபட்டி பொட்ரோல் பங்கில் பெட்ரோல் அளவைவிட குறைவாக அடிப்பதாகக்கூறி, கொசவபட்டி கிராம இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே, இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சார்பு ஆய்வாளர் சவடமுத்து அங்கு இருந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைக்க முயன்றார். அப்போது இந்த பிரச்னையில் சம்மந்தமே இல்லாத கொசவபட்டி பகுதியைச்சேர்ந்த திருப்பதி என்ற ஓட்டுநரை வழுக்கட்டாயமாக காரில் ஏற்றினார். பின், அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆபாச வார்த்தையில் திட்டி தடியால் பலமாக அடிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வைரல் வீடியோ...வடமாநில இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் சைக்கோ மனிதன்...